வியாழன், 12 மார்ச் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மார்ச் 2026 (16:05 IST)

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

thaai kizhavi
மணிகண்டனிடம் உதவியாளராக பணிபுரிந்த சிவக்குமார் முருகேசன் என்பவர் இயக்கியிருக்கும் திரைப்படம் தாய்க்கிழவி. இது இவரின் முதல் திரைப்படமாகும். மதுரை தேனி பகுதிகளில் வசிக்கும் வயதான அப்பத்தா ஒருவரை பற்றிய கதை இது.. ஒரு நிஜ கதையாகும்.

மதுரையில் வசிக்கும் ஒரு மூதாட்டியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் சிவக்குமார் முருகேசன். தாய்க் கிழவி கதாபாத்திரத்தில் நடிகர் ராதிகா அசத்தலாக நடித்திருக்கிறார்.. இந்த படத்திற்காக அவர் தினமும் மூன்று மணி நேரம் மேக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது..

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இந்தபடம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது.. படத்தை பார்த்த பலரும் சமூகவலைத்தளங்களில் படத்தை பாராட்டி வருகிறார்கள்.. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வெளியிட்டிருக்கிறார்..

கடந்த சில நாட்களாகவே இந்த படத்திற்கு அதிக அளவில் புரமோஷன் செய்யப்பட்டது.
 இன்னிலையில் தாய் கிழவி திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலகமெங்கும் 15 கோடி வசூல் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.