வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Updated : புதன், 29 ஆகஸ்ட் 2018 (11:38 IST)

யாஷிகாவால் ஈர்க்கப்பட்டது ஏன்? - ரகசியத்தை கூறிய மஹத்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட மஹத், முகம் சுளிக்கும் செயல்பாடுகளால் கடந்த வாரம் ரெட் கார்டுடன் வெளியேறினார். இதில் அவருடைய பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் என இரண்டு பக்கங்களும் வெளியில் வந்தது.
மஹத் வெளியேறியது, பலருக்கும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் வெளியேற முக்கிய காரணம் ஐஸ்வர்யா, மற்றும் யாஷிகா. இவர்களது  செய்கைகள் குறித்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கடுமையான விமர்சித்தனர்.
 
இந்நிலையில் மஹத் ஏற்கனவே பிராச்சி என்ற பெண்ணுடன் காதலில் இருந்தார். பின்னர் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் ஒருவரான யாஷிகாவுடனும் காதலில் விழுந்தார். யாஷிக்காவுக்கும் காதலன் இருக்கிறார் என்பது வேறு விஷயம்.
 
இந்நிலையில் வெளியில் வந்த மஹத் இதுபற்றி வாய் திறந்துள்ளார். "தனக்குப் பிடித்த குணம் உள்ளவருடன் ஒரே வீட்டில் இருந்தால் நிச்சயம் ஒரு வித ஈர்ப்பு உண்டாகும்.  அதுவும் தொடர்ந்து 70 நாட்கள் டி.வி, ஃபோன் போன்ற மற்ற விஷயங்கள் எதுவும் இல்லாத நிலையில் இந்த ஈர்ப்பு மிக சகஜமாகவே வரும். அந்த  மாதிரியான ஒரு சூழ்நிலையில் இருந்தால் தான் இதை மற்றவர்களும் உணர்ந்துக் கொள்ள முடியும். 70 நாட்கள் அந்த வீட்டில் இருந்ததால், அதன்  கஷ்டங்களும் வலியும் எனக்கு மட்டுமே தெரியும்" எனக் கூறியிருக்கிறார்.