வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (09:19 IST)

ஐஸ்வர்யா, யாஷிகாவை கட்டியணைத்த மும்தாஜ் குடும்பத்தினர். உச்சத்திற்கு சென்ற செண்டிமெண்ட்

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி முழுவதுமே போட்டியாளர்கள் சண்டை சச்சரவு இல்லாமல் செண்டிமெண்ட் மழையில் நனைந்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். குறிப்பாக ஐஸ்வர்யா, யாஷிகா ஆகிய இருவரிடமும் இவ்வளவு இளகிய மனம் இருக்கின்றது என்பது பார்வையாளர்களுக்கு தற்போதுதான் புரிந்தது
 
இந்த நிலையில் கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடந்தது போல் இன்று முதல் பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தருகின்றனர். அந்த வகையில் இன்று மும்தாஜின் குடும்பத்தினர் வந்தனர்.
 
பெற்றோர்களை பார்த்த மும்தாஜ் செண்டிமெண்டால் கண்ணீர் விட்டு அழுதார். அதேபோல் மும்தாஜின் பெற்றோர்கள் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவை தனது மகள் போல் கட்டியணைத்து அவர்களுக்கு ஆறுதலும் வாழ்த்துக்களும் கூறியது செண்டிமெண்ட் உச்சகட்டத்திற்கு சென்றதாக கருதப்படுகிறது.
 
அனேகமாக இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் செண்டிமெண்ட் நிரம்பி வழியும் என்றே கருதப்படுகிறது.