வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (13:34 IST)

உங்க அம்மாவை வந்து நான் மன்னிப்பு கேட்க சொன்னேனா...?; கோபத்தில் பாலாஜி

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் கடந்த வாரம் முழுவதும் பாச மழை பொழிந்து வந்தனர் போட்டியாளர்கள். இந்த வாரம் என்ன நடக்கும் என்பது பலரது  எதிர்ப்பார்ப்பாக உள்ளது. 
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் பாலாஜிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. பாலாஜியிடம் நீங்கள் என்  முன்னாடி என்ன பேசுகிறீர்கள் பின்னால் சென்று என்ன பேசுகிறீர்கள் என்பது தனக்கு நன்றாக தெரியும் என கூறுகிறார். இதனால் மிகவும் கோபமான பாலாஜி,  உன் பின்னால் சென்று நான் என்ன பேசினேன் என கேட்கிறார்.
 
அவரிடம் தன்னுடைய அம்மா வந்து மனிப்பு கேட்டதை சுட்டி காட்டி பேசுகிறார் ஐஸ்வர்யா. இதற்கு பாலாஜி உங்க அம்மாவை வந்து நான் மன்னிப்பு கேட்க சொன்னேனா...? ஒருவேளை உங்க அம்மா வந்து மன்னிப்பு கேட்டது பிடிக்க வில்லை என்றால் யார் இவங்க ஏன் மன்னிப்பு கேட்குறீங்க என கூற வேண்டியது  தானே..? கேட்டை தாண்டி போகிவிட்டால் எல்லோரும் வேறு வேறு தான் என கூறுகிறார்.
 
இதன் மூலம், மீண்டும் ஐஸ்வர்யா தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. ஏற்கனவே ராணி மகாராணி டாஸ்கில் மூலம்  கோபமான ஐஸ்வர்யா மீது ஏகப்பட்ட கோபத்தில் இருக்கும் ரசிகர்கள். இந்த வாரம் எவிக்சனில் கண்டிப்பாக ஐஸ்வர்யா வெளியேற்றக்கூடும் என  எதிர்பார்க்கப்படுகிறது.