1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 4 மார்ச் 2026 (19:56 IST)

Jananayagan: ஜனநாயகன் ரிலீஸ் தேதியை குறிச்ச புரட்யூசர்!.. இது கன்பார்ம்!..

jananayagan
விஜய் நடித்து உருவான ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கொடுக்கப்படாததால் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை. இடையில் தயாரிப்பாளர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து ஒரு மாதம் எந்த தீர்வும் கிடைக்காமல் கடந்த பிப்ரவரி 5ம் தேதி வழக்கை வாபஸ் பெற்றதோடு மறு தணிக்கைக்கும் விண்ணப்பித்து விட்டார்..

தணிக்கை வாரியத்தை பொறுத்தவரை குறைந்தபட்சம் மறுத்தணிக்கைக்கு விண்ணப்பித்து 40 நாட்களுக்குள் சான்றிதழை கொடுத்துவிட வேண்டும். ஆனால் இப்போது வரை படத்தை அதிகாரிகள் பார்க்கவில்லை. எப்படியும் மார்ச் 15ம் தேதிக்குள் ஜனநாயகன் படத்தை மறுதுணிக்கை செய்து சான்றிதழை கொடுத்து விட வேண்டும்..

மார்ச் 15ம் தேதிக்குள் சான்றிதழை கொடுத்தாலும் மார்ச் மாதம் படத்தை வெளியிட தயாரிப்பாளர் விரும்பவில்லை.. அநேகமாக தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முதல் பாதியில் அதாவது மார்ச் 15ம் தேதிக்குள் நடந்தால் அடுத்து வரும் வியாழன் அல்லது வெள்ளியில் ஜனநாயகன் படத்தை வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டிருக்கிறாராம்..

ஒருவேளை ஏப்ரல் 15ஆம் தேதிக்கு மேல்  தமிழகத்தில் தேர்தல் நடந்தால் மே மாதத்தில் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம்.