ஜனனியை காப்பாற்ற மொட்டை அடிக்கும் பாலாஜி: உருக்கமான வீடியோ
பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் எவிக்சன் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜனனி கடைசி நேரத்தில் நூலிழையில் தப்பினார். அந்த நிம்மதி பெருமூச்சில் இருந்து அவர் விடுபடும் முன்னரே இந்த வாரமும் நாமினேஷன் பட்டியலில் அவர் இடம்பெற்றுள்ளார்.
இந்த வாரம் ஐஸ்வர்யா நாமினேஷன் பட்டியலில் உள்ளதால் ஜனனிக்கு ஆபத்து இல்லை என்றாலும் ஐஸ்வர்யா எவ்வகையிலாவது காப்பாற்றப்பட்டால் பலிகடா ஜனனிதான் என்பது உறுதி
இந்த நிலையில் தனக்காக மொட்டை அடிக்கும்படி ஜனனி, பாலாஜியிடம் வேண்டுகோள் விடுக்கின்றார். மொத்தமாக மொட்டையடிக்க வேண்டுமா? என முதலில் யோசிக்கும் பாலாஜி பின்னர் தனது மகள் நினைத்து வரும் ஜனனிக்காக மொட்டை அடிக்க ஒப்புக்கொள்கிறார். அவருக்கு மும்தாஜ் மொட்டை அடுத்துவிடும் உருக்கமான காட்சிகளுடன் இன்றைய முதல் புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது.