திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By
Last Modified: புதன், 29 ஆகஸ்ட் 2018 (13:02 IST)

புறம் பேசுவதை நிறுத்தாத பாலாஜி - எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்டியா? பாலாஜி மீது ரசிகர்கள் ஆவேசம்

பிக்பாஸில் நடிகர் பாலாஜி எவ்வளவு பட்டபோதிலும் புறப் பேசுவதை ஒரு ஃபுல் டைம் வேலையாகவே செய்து வருகிறார்.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர்களின் குடும்பத்தினர் அழைத்து வரப்படுகின்றனர். பல நாட்கன் கழித்து குடும்பத்தினரை பார்க்கும் போட்டியாளர்கள் கண்ணீரில் மூழ்கினர்.
 
பிக்பாஸ் வீட்டில் நடிகர் பாலாஜி புறப் பேசுவதை ஒரு ஃபுல் டைம் வேலையாகவே செய்து வருகிறார் என்றே கூறலாம். எப்பொழுதும் அவர் மற்றவர்களைப் பற்றி புறம் பேசிக் கொண்டே இருப்பார்.அவரின் இந்த கேவலமான செயலுக்கு தான் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பையை கொட்டினார். 

 
இன்றைய முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் ஐஸ்வர்யாவின் அம்மா, ஐஸ்வர்யா குப்பை கொட்டியதற்காக  பாலாஜியிடம்  மன்னிப்பு கேட்பதையும், அதற்கு பாலாஜி ஐஸ்வர்யாவின் அம்மாவிற்கு ஆறுதல் சொல்வதையும் பார்த்து ரசிகர்கள் பாலாஜியை பாராட்டினர்.
 
அதனை சுக்குநூறாக்கும் வகையில், தற்பொழுது வெளியாகியுள்ள இரண்டாவது புரோமோவில் பாலாஜி மும்தாஜிடம் ஜனனி, போலியாக இருக்கிறார் என புறம் பேசுகிறார்.
தயவு செய்து புறம் பேசாதீர்கள் அப்பா, என பாலாஜியின் மகள் கடிதம் எழுதிய போதும், பாலாஜி தொடர்ந்து புறம் பேசுவது, அவரது இமேஜை டோட்டலாக பாதிப்படைய செய்கிறது. உன் மேல சானியையே ஊத்தினாலும் நீ திருந்த மாட்ட என பாலாஜியை சமூக வலைதளத்தில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.