1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  4. Tiruthuraipoondi candidate marimuthu got attention in internet

குடிசை வீடு… கையில் 3000 ரூபாய் பணம்!.... தமிழகத்தின் ஏழை வேட்பாளர் இவர்தான்

திருத்துறைப் பூண்டி. மாரிமுத்து
திருத்துறைப் பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்தான் தமிழகத்தின் ஏழையான வேட்பாளராக அறியப்படுகிறார்.

தமிழகத்தில் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர். அதில் பல வேட்பாளர்களும் தங்கள் சொத்து மதிப்பைக் குறைத்துக் காட்டினாலும் கோடிகளில் சொத்து மதிப்பு உள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் மாரிமுத்து குடிசை வீட்டில் வாழும் வேட்பாளராக இருக்கிறார்.

அவரது வேட்புமனுவில் 1.75 லட்சம் மதிப்புள்ள  75 சென்ட் நிலம், கையில் ரொக்கப் பணம் 3000 ரூ, வங்கியில் ரூ.58,156 , குழந்தைகளுக்கு 3 பவுன் தங்க நகைகள் என தனது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் அவரின் குடிசை வீடும் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அடுத்த கட்டுரையில்
திமுக& அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பி அடித்தாரா மம்தா பானர்ஜி!