1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. TTV Dinakaran changed vellore ammk candidate

அமமுக வேட்பாளர் திடீர் மாற்றம்: டிடிவி தினகரன் அறிக்கை!

டிடிவி தினகரன்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக ஆகிய இரண்டு மெகா கூட்டணிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. மேலும் மூன்றாவது கூட்டணியாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமையில் ஒரு கூட்டணி நான்காவது கூட்டணியாக டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியும் போட்டியிடுகின்றன. இதுபோக 234 தொகுதிகளிலும் சீமானின் நாம் தமிழர் கட்சி போட்டியிடுவது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியின் வேட்பாளர்கள் அனைவரும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். அதேபோல் இந்த கூட்டணியில் உள்ள தேமுதிகவும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்தது
 
இந்த நிலையில் அம்மா முன்னேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஆட்சி மன்றக் குழு  பரிசீலித்து எடுத்த முடிவின்படி வேலூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளராக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த பாலாஜி என்பவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக தர்மலிங்கம் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
கொரோனாவுக்கு முக்கியத்துவம் தேவையில்லை, தடுப்பூசிக்கு செலவு செய்வது வீண்: ஒய்.எஸ்.ஆர் காங். எம்பி