1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 ஏப்ரல் 2021 (11:31 IST)

ஐடி ரெட்டு பின்னணியில் உள்நோக்கம் - ஆர்.எஸ்.பாரதி!

தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி  சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவினரை குறிவைத்து  மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள வருமான துறையினரால் சோதனை நடத்தி வருவதால்  திமுக வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.    

 
தேர்தல் நெருங்கும் வேலையில் ஐடி சோதனை நடப்பது உள்நோக்கம் கொண்டது என்று திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் நெருக்கடி நிலையை சந்தித்தது திமுக இயக்கம் எனவும் இதுபோன்ற சோதனைகளை  கண்டு திமுக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள் என்றும் அதிமுக அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் நேரில் ஊழல் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பி அவர்  கடந்த தேர்தலில்  கன்டெய்னர் லாரியில் ரூபாய் 570 கோடி பிடிபடும்.  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார் ஆர் எஸ் பாரதி.