திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (16:22 IST)

அமமுக பற்றி கேள்வி கேட்டால் சப்பென்று அடித்து விடுவேன் – அமைச்சர் பதிலால் சர்ச்சை!

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அமமுக பற்றி கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன் என பத்திரிக்கையாளர்களிடம் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அதிமுகவின் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீப காலமாக சர்ச்சைக்குள்ளான பேச்சுக்களை பேசி வருகிறார். இதனால் சில மாதங்களுக்கு முன்னர், விருதுநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து ராஜேந்திர பாலாஜி விடுவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் கூட்டாக அறிவித்துள்ளனர்.  ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் அவருக்கு பதவி வழங்கப்பட்டது. இப்படி கட்சிக்குள் அவருக்கு எதிராக பல எதிர்ப்புகள் எழுந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில் இப்போது தேர்தல் பிரச்சாரத்திலும் அவர் சர்ச்சைகளுக்கு பஞ்சம் வைக்காமல் இருக்கிறார். இன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி தேர்தல் அலுவலகத்தைத் தொடங்கிவைத்த அவரிடம் அமமுக பற்றி கேள்வி எழுப்பினர் பத்திரிக்கையாளர்கள். அப்போது அவர்களிடம் ‘அவர்கள் பற்றி எல்லாம் கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன்’ எனக் கூறியுள்ளார்.