1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
  4. Kamal Campaigns all over Tamil Nadu

காசு கொடுத்து சேர்த்தது அல்ல ... கமல் பிரச்சாரத்தி சேரும் கூட்டம்!

கமல்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் மதுரை தொகுதியில் உள்ள வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். 

 
மதுரை அவனியாபுரம் பேருந்து நிலையத்தில் கமல் ஹாசன் அவர்கள் பேசியது, எங்கள் வேட்பாளர்கள் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்தவர்கள். எங்களுடன் இருப்பவர்களுக்கு ஏற்கனவே தொழில் இருக்கிறது. அவர்கள் இங்கே மக்களுக்கான கடமையை செய்ய வந்திருக்கிறார்கள்.  என் எஞ்சிய வாழ் நாட்கள்  மக்களுக்காக. 
 
இந்த கூட்டம் காசு கொடுத்து சேர்த்தது இல்லை. இந்த தொகுதியில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். வீரத்தின் உச்சக்கட்டம் அகிம்சை. நல்லதை தொடர்ந்து செய்வது என் கடமை. ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழல் கட்சி இல்லை. வேலை இப்போது தான் தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள். தமிழகம் சீரமையும் என கூறினார்.
அடுத்த கட்டுரையில்
திமுகவை நம்பினால் தெருவுக்கு தான் போகனும்... டிடிவி தினகரன் !