1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

தனுசு: ஐப்பசி மாத ராசி பலன்கள் 2021

கிரகநிலை: தன ஸ்தானத்தில் குரு, சனி - ரண் ருண ரோக ஸ்தானத்தில் ராஹூ - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன் - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன், கேது என கிரக நிலவரம் உள்ளது.

 
கிரகமாற்றங்கள்:
 
23-10-2021 அன்று செவ்வாய் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-10-2021 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-10-2021 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
13-11-2021 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காணும் திறமை உடைய தனுசு ராசியினரே இந்த மாதம் இழுபறியாக இருந்த சில வேலைகள் சாதகமாக நடந்து முடியும். பணவரத்து அதிகரிக்கும். தெளிவான முடிவு எடுப்பதன் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விவகாரங்களில் சாதகமான போக்கு காணப்படும். கடினமான வேலைகள் கூட சுலபமாக முடியும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். கடினமான முயற்சிகள் கூட எளிமையாக செய்ய முடியும். 
 
தொழில் வியாபாரத்தில் இருந்த பண தட்டுப்பாடு நீங்கும். வசூலாக வேண்டிய கடன்பாக்கிகள் வசூலாகும்.  வியாபாரம் தொடர்பான பயணங்களினால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை குறையும். வர வேண்டிய பணம் வந்து சேரும்.
 
குடும்பத்தில் இதமான சூழ்நிலை  காணப்படும். வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. அடுத்தவர் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது.  பிள்ளைகளிடம் கனிவாக நடந்து கொள்வது நல்லது.
 
பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.  கவுரவம் உயரும். மற்றவர்களிடம் நன்மதிப்பு உண்டாகும்.
 
கலைத்துறையினருக்கு விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.  மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள்  மத்தியில் மதிப்பு கூடும். 
 
அரசியல்துறையினருக்கு எந்த ஒரு விஷயத்திலும் வேகம் காட்டினாலும் அதே நேரத்தில் அதில் உள்ள நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியமாகிறது. காரிய அனுகூலம் உண்டாகும். சனி சஞ்சாரத்தால் காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். 
 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் காண்பீர்கள். மற்றவர்களுடன் இருந்த கருத்ஒது வேற்றுமை நீங்கும்.
 
பரிகாரம்: முருகனை வணங்கிவர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: அக் 28, 29, 30
அதிர்ஷ்ட தினங்கள்: அக் 21, 22.