1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By

கன்னி: ஐப்பசி மாத ராசி பலன்கள் 2021

கிரகநிலை: ராசியில் செவ்வாய், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்ரன், கேது - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராஹூ என கிரக நிலவரம் உள்ளது.

கிரகமாற்றங்கள்:
23-10-2021 அன்று செவ்வாய் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-10-2021 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
31-10-2021 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-11-2021 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
அதிக நினைவுத்திறனும் எதையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் உடைய கன்னி ராசியினரே இந்த மாதம் நல்ல பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். முயற்சிகள் வெற்றி பெறும். எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது நல்லது. வேகத்தை குறைத்து விவேகமுடன் செயல்படுவது நன்மை தரும். எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் வைப்பது நல்லது. பணவரத்து அதிகமாகும். பெரியோர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது.
 
தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடைகளும் இருக்காது. எந்த ஒரு வேலையையும் அதிக முயற்சி செய்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமுடன் பணியாற்றுவது நல்லது.  புதிய வேலைக்கு செய்யும் முயற்சிகள் பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். கொடுத்த வேலைகளை நேரத்தில் செய்வது உகந்தது.
 
குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலையை தரும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் குறையும். குழந்தைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். 
 
பெண்களுக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கும்போது ஒருமுறைக்குபலமுறை யோசிப்பதுநல்லது. மற்றவர்களிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. 
 
அரசியல் துறையினருக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். உற்சாகமாக எதையும் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். விருந்து கேளிக்கைகளில் பங்கு கொள்வீர்கள். கடன் பிரச்சனை குறையும். வீண் அலைச்சல் வீண் பயம் குறையும். அடுத்தவர் செய்யும் இடையூறுகளையும் உங்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் சாமர்த்தியத்தைப் பெறுவீர்கள். 
 
கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுக்கிரன் தனது சஞ்சாரத்தால் வீண் செலவை  உண்டாக்குவார். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.  திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். ஆன்மீக தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 
 
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் முடிவு எடுக்கும் போது தீர ஆலோசித்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். 
 
பரிகாரம்: பகவத்கீதை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்சனை களும் தீரும். மன நிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: அக் 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: நவ 10, 11, 12.