1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (16:59 IST)

மிதுனம்: ஆனி மாத ராசிப் பலன்கள்

கிரகநிலை: ராசியில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) - களத்திர ஸ்தானத்தில் சனி(வ), கேது - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
நீங்கள் உழைப்பதின் மூலம் முன்னுக்கு வர வேண்டும் என விரும்பும் மிதுன ராசி அன்பர்களே, இந்த மாதம் வாழ்க்கைக்கு தேவையான புதிய  வசதிகள் கிடைக்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.  புதிய ஆடை அணிகலன்கள் - ஆடம்பரப் பொருட்கள் வாங்குவீர்கள். வீடு,  மனை வாங்க திட்டமிடுவீர்கள். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள். ஆனால் மனகுழப்பம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எடுக்கும் காரியம்  சிறிது முயற்சிக்குப் பின் நடைபெறும்.
 
குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு  திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. புதிய  தொழில் தொடங்குவது பற்றி நண்பர்களிடம் ஆலோசனை நடத்துவீர்கள்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங் களை மற்றவர்களிடம் கூறாமல் இருப்பது நன்மை தரும். மேல்  அதிகாரிகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.
 
கலைத்துறையினர் சிறப்பாக செயல்பட்டு அனைவரின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் பெற முடியும். புதிய வாய்ப்புகளால் மனம் மகிழ்ச்சி  அடையும்.
 
அரசியல் துறையினருக்கு ஏற்படும் அனுபவங்கள் எதிர்காலத்திற்கு தேவைப்படும் அறிவுரைகளாக இருக்கும். எந்த ஒரு செயலில் ஈடுபடும்   போதும் கவனமாக இருப்பது மிகவும் நல்லது.
 
பெண்களுக்கு உங்களது ஆலோசனை கேட்டு குடும்பத்தில் இருப்பவர்கள் செயல்படுவார்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். வீண் அலைச்சல்  ஏற்படலாம்.
 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்தநிலை மாறும். சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவி கிடைக்கும்.
 
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்:
 
இந்த மாதம் வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள்  கிடைக்கும்.  பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். செலவுகள் ஏற்படும். பயண சுகம்  கிடைக்கும். புதிய வாய்ப்புகள் கிடைப்பது தாமதப்படும். 
 
திருவாதிரை:
 
இந்த மாதம் தேவையான பணஉதவி கிடைக்கலாம்.  மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள்.  எதிலும் எச்சரிக்கை தேவை. 
 
புனர்பூசம் 1, 2, 3 பாதம்:
 
இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர் பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய  நண்பர்கள் சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். 
 
பரிகாரம்: நரசிம்மர் கோவிலுக்குச் சென்று நெய் விளக்கேற்றி வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 20, 21, 22
அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 11, 12.