வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (16:43 IST)

ரிஷபம்: ஆனி மாத ராசிப் பலன்கள்

கிரகநிலை: ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - களத்திர ஸ்தானத்தில் சந்திரன், குரு(வ) -  அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.
பலன்:
 
எப்போதும் நியாயத்தின் பக்கம் இருக்க விரும்பும்  ரிஷப ராசி அன்பர்களே,  இந்த மாதம் தெளிவான  சிந்தனை தோன்றும். எந்த  காரியத்தையும் செய்யும் முன் ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி  காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயல் கண்டு  மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் நட்பு கிடைக்கும். அதனால் கவுரவம் அதிகரிக்கும். புதிய  தொடர்புகள் மகிழ்ச்சி தரும்.
 
குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக் கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.
 
தொழில் வியாபாரத்தில் இருந்த  மந்தநிலை மாறும். புதிய ஆர்டர்கள்  வந்து சேரும். வியாபாரிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ளும்  கால கட்டம். எதிர்மறையான சிந்தனைகளை விட்டு விடுவீர்கள்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரிகள் கூறிய வேலையை  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். சகஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. நேரத்திற்கு தகுந்தாற்போல் பேச்சை மாற்றி வெற்றி பெறுவீர்கள்.
 
கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்பை தவற விட்டு பின்பு நம்பிக்கையான ஒருவர் மூலம் அதைப் பெற முடியும். எந்த விசயத்திலும்  ஒரு  முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது எதிர்காலத்திற்கு உதவும்.
 
அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணிகள் நடப்பதற்கு சற்று அதிகமாக உழைக்க வேண்டி வரலாம். தந்தை வழி அரசியல் செய்பவர்கள்  எதிலும் கவனமாக பேசுவது நல்லது.
 
பெண்களுக்கு  அடுத்தவர்களின் வேலைக்காக வீணாக  அலைய நேரிடும். மனோ தைரியம் அதிகரிக்கும். எதிலும் கூடுதல்  கவனத்துடன்  செயல்படுவது நல்லது.
 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
 
கார்த்திகை 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்த  பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது. 
 
ரோகிணி:
 
இந்த மாதம் எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும் நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தரும், கடன்  விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய்தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். 
 
மிருக சிரீஷம் 1, 2, பாதம்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். 
 
பரிகாரம்: சிவன் கோவிலுள்ள நந்தீஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 18, 19,
அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 8, 9, 10.