ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (16:37 IST)

மேஷம்: ஆனி மாத ராசிப் பலன்கள்

கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன், ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன், குரு (வ)-பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ), கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.

 
பலன்:
 
சிக்கலான காரியங்களையும் தெளிவான முடிவெடுத்து பிரச்சினைகளை தீர்க்கும் மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் வீண் மனக்கவலை   உண்டாகும். எதிர்பாராத செலவு ஏற்படும்.  அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம்.  வாக்கு  வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும்.
 
குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர்  அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி  உண்டாகும்.
 
தொழில் வியபாரத்தில் இருந்த போட்டி கள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவ தில் சிந்தனை செலுத்துவீர்கள்.  சிறு வியாபாரிகள் கூட அதிக  லாபத்தை காண முடியும்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் பணியாற்றுவதால் உடல் சோர்வடைய நேரலாம். வேலை செய்யும் இடத்திலும் மேல்  அதிகாரிகளிடமும் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த பணி உயர்வு கிட்டும்.
 
கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தாராளமாக கிட்டும். யாரையும் நம்பி எந்த ரகசியங்களையும் கூற வேண்டாம். சிலர் எதிரிகளின்  தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும்.
 
அரசியல் பிரமுகர்களுக்கு எதிர் பார்த்த விசயங்கள் கை கூடி வரும். அரசு விவகாரங்களில் தலையிடும் போது ஒருமுறைக்கு பலமுறை  யோசித்து செய்வது நன்மையைத்தரும்.
 
பெண்களது செயல்களுக்கு பக்கபலமாக யாராவது இருப்பார்கள். திறமையான பேச்சின் மூலம் எதிலும் வெற்றி காண்பீர்கள். செலவுகளை  குறைப்பது நன்மை தரும்..
 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள்  குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும்.
 
அஸ்வினி:
 
இந்த மாதம் பணவரத்து அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனதுணிவு உண்டாகும்.  எந்த ஒரு  காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. 
 
பரணி:
 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம்  கவனமாக பேசுவது வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேல் அதிகாரிகள் சொன்ன வேலையை   செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். 
 
கார்த்திகை 1ம் பாதம்:
 
இந்த மாதம் கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது  நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.
 
பரிகாரம்: தினமும் கந்தகுரு கவசத்தை பாராயணம் செய்யுங்கள். எதிலும் சிரமம் ஏற்படாது.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், புதன்
சந்திராஷ்டம தினங்கள்: ஜூன் 16, 17, ஜூலை 13, 14
அதிர்ஷ்ட தினங்கள்: ஜுலை 6, 7.