1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 13 பிப்ரவரி 2020 (14:52 IST)

மேஷம்: மாசி மாத ராசி பலன்கள்

(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) - கிரகநிலை: தைரிய ஸ்தானத்தில் ராஹூ - ரண, ருண ஸ்தானத்தில் சந்திரன் -  பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சனி, கேது - லாப ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ) - அயன, சயன, போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகங்கள் வலம் வருகின்றன. 
கிரக மாற்றங்கள்:
 
13-02-2020 அன்று மாலை 4.32 மணிக்கு சூர்ய பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-02-2020 அன்று மாலை 6.28 மணிக்கு புதன் பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
01-03-2020 அன்று பகல் 2.29 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார். 
11-03-2020 அன்று மாலை 3.35 மணிக்கு புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
12-03-2020 அன்று பகல் 11.44 மணிக்கு சூர்ய பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்கள்:
 
பணவரவு தாமதமாக இருந்தாலும் அதை சமாளிக்கும் திறன் கொண்ட மேஷ ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்ப்புகள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பல வகையான  யோகங்கள் ஏற்படும்.  உடல் நோய்கள் நீங்கி ஆரோக்கியம் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை.
 
தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும். கவனமாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்து செல்வது நல்லது.
 
குடும்பச் செலவுகள் கூடும். கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும்.  குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாக பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.
 
பெண்களுக்கு வலிய சென்று உதவுவதன் மூலம் வீண் பழி ஏற்படலாம். கவனம் தேவை. கோபத்தை தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு உங்கள் கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
 
அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர். 
 
மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.
 
அசுவினி:
 
இந்த மாதம் தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பணபிரச்சனை குறையும்.  உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனை குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். 
 
பரணி:
 
இந்த மாதம் முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். பணம் சம்பாதிக்கும் திறமை  அதிகப்படும்.  உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும்.
 
கார்த்திகை 1 - ம் பாதம்:
 
இந்த மாதம் காரணமில்லாமல் மனதில் தைரியம் குறையும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். வாழ்க்கையில் முன்னேற வேகம் காட்டுவது நல்லது. மன குழப்பம் நீங்கும். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
பரிகாரம்: துர்கை அம்மனை செவ்வாய் கிழமையில் அர்ச்சனை செய்து வழிபடுவது எல்லாபிரச்சனைகளையும் தீர்க்கும். காரிய தடை அகலும்.
சந்திராஷ்டம தினங்கள்: பிப்ரவரி 16, 17, 18
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 8, 9, 10.