செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2024 (08:35 IST)

டிசம்பர் 2024 மாத ராசிபலன்கள் மற்றும் பரிகாரங்கள்! – கடகம்! | December 2024 Monthly Horoscope| Kadagam

Kadagam
December 2024 Monthly Horoscope : இந்த 2024ம் ஆண்டின் இறுதி மாதமான டிசம்பர் மாதம் பல்வேறு வழிகளில் நன்மைகளை தரும் மாதமாக அமைகிறது. இந்த ஆண்டின் இறுதி மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.


 
கிரகநிலை:
ராசியில் செவ்வாய் - தைரிய வீரிய  ஸ்தானத்தில் கேது - பஞசம  ஸ்தானத்தில் சூர்யன், புதன் (வ), சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம  ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப  ஸ்தானத்தில் குரு(வ) என வலம் வருகிறார்கள்

கிரகமாற்றங்கள்:
03-12-2024 அன்று சுக்கிரன்  ரண ருண ரோக  ஸ்தானத்தில் இருந்து களத்திர  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  
15-12-2024 அன்று சூர்யன் பஞ்சம  ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக  ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
30-12-2024 அன்று சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
குடும்பத்தினருடன் அதீத பற்று கொண்ட கடக ராசி அன்பர்களே, இந்த மாதம்  இளைய சகோதரத்துடன் சின்ன சின்ன நெருடல்கள் இருக்கும். சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும். தாய் தந்தை ஆரோக்கியத்தின் மீது கவனம் தேவை. அவர்களின் மருத்துவ செலவிற்கு சிறிது தொகையை செலவழிக்க வேண்டி வரலாம்.

குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டும். முன்னோர்களை அமாவாசை தோறும் வழிபடவும். மறைவிடங்களில் சிலருக்கு அலர்ஜி ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் இருந்த வந்த மனக்கசப்பு நீங்கி புதிய உத்வேகம் பிறக்கும். தந்தையாருடன் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து மறையும்.

உத்யோகஸ்தர்களுக்கு நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் அங்கீகரிக்கப்படுவீர்கள்.

தொழில் செய்பவர்கள் லாபகரமான முதலீடுகளில் யாரையும் நம்பவேண்டாம். உங்கள் மீது யார் மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்களோ அவர்களை நம்பவும்.

கலைத்துறையினர் கடுமையாக உழைப்பின் மூலம் முன்னேற வேண்டி இருக்கும். நண்பர்களின் உதவியால் நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது நல்லது.

அரசியல்வாதிகள் வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். மேலிடத்திலிருந்து முக்கிய பொறுப்புகள் உங்கள் கையில் வரும். சந்தோஷமான செய்தி வந்து சேரும்.

மாணவர்கள் பாதியில் விட்ட படிப்பை தொடருவீர்கள். படிப்பில் சாதனைகள் புரிய முயற்சி மேற்கொள்வீர்கள். நல்ல நண்பர்களின் மூலம் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.

பெண்களுக்கு தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும்.

புனர் பூசம் 4ம் பாதம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு  அனுப்பும் போது கவனம் தேவை.

பூசம்:
இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள்.  விசேஷ நிகழ்ச்சிகளில்  குடும்பத்தினருடன்  கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும்.

ஆயில்யம்:
இந்த மாதம் பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.  திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மனோதைரியம் கூடும்.
பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஸ்ரீஹயக்ரீவ வழிபாடு மேற்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்
அதிர்ஷ்ட தினங்கள்: 1, 2, 28, 29
சந்திராஷ்டம தினங்கள்: 7, 8