லவ்வே இல்லாத லவ் மேரேஜ்..... எப்படி அது..? "ஓ மை கடவுளே" ட்ரைலர் !
அஸ்வத் மாரிமுத்து இயக்கும் "ஓ மை கடவுளே" என்ற படத்தில் அசோக் செல்வன் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரித்திகா சிங் நடித்துள்ளனர். இரண்டாவது கதாநாயகியாக வாணி போஜன் நடிக்க முக்கிய கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.
அக்சஸ் ஃபிலிம் ஃபாக்டரி தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து கடைசி கட்ட வேலைகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகியுள்ளது. இப்படம் வருகிற பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று திரைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளனர். இதோ அந்த ட்ரைலர் வீடியோ....!