சினிமாவுக்கு குட் பை...பாக்சிங்கில் ரீ என்ட்ரி!

Papiksha| Last Updated: சனி, 19 அக்டோபர் 2019 (15:10 IST)
இறுதிச்சுற்று படத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களைக் கவர்ந்த ரித்திகா சிங் அந்த படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’, லாரன்சுடன் ‘சிவலிங்கா’ போன்ற படத்தில் நடித்த அவர்  தமிழ், தெலுங்கி , ஹிந்தி என ஒரு சில படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

தற்போது அருண் விஜய்யின் பாக்சர் படத்திலும், அரவிந்த் சாமியின் ‘வணங்காமுடி’ படத்திலும்   நடித்து வருகிறார். மேலும், அவர் ஓ மை கடவுளே எனும் படத்தில் அசோக் செல்வனுடன் இணைந்து நடித்து வருகிறார். சினிமா நுழைந்த குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து படங்ககளில் கம்மிட்டாகி பிஸியாக நடித்து வந்த ரித்திகா சிங் பாக்சிங்கில் கவனத்தை செலுத்துவதில் இருந்து ஒதுங்கிவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது தன் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் போதுமானதாக கருதும் பாக்சிங்கில் அவர் மீண்டும் கவனம் செலுத்த உள்ளாராம். சினிமாவிற்கு குட் பை சொல்லிவிட்டு பாக்சிங்கில் தீவிரமாக இறங்கவுள்ளாராம். இந்த தகவவளை அறிந்தவுடன் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் நீங்கள் உங்களுக்கு பிடித்ததை மன திருப்தியுடன் செய்யுங்கள் என அறிவுரை கூறி வருகின்றனர். 


இதில் மேலும் படிக்கவும் :