1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 17 அக்டோபர் 2019 (09:06 IST)

விஜய்சேதுபதி சிறப்புத்தோற்றத்தில் நடிக்கும் படம்!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நட்புக்காக ஒருசில படங்களில் சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் அசோக்செல்வன் ஹீரோவாக நடித்து வரும் ஒரு படத்தில் விஜய்சேதுபதி சிறப்புத்தோற்றத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
 
அசோக்செல்வன், ரித்திகாசிங், வாணிபோஜன் உள்ளிட்டோர் நடித்து வரும் திரைப்படம் ‘ஓ மை கடவுளே. இந்த படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் தற்போது விஜய்சேதுபதி இணைந்துள்ளார்.
 
விஜய்சேதுபதி இந்த படத்தில் 15 நிமிடங்கள் தோன்றுவார் என்றும் இருப்பினும் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டர் என்றும், இந்த படத்தில் நடிக்க அவர் சம்பளம் ஏதும் பெற்றுக்கொள்ளவில்லை என்றும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது
 
ஏற்கனவே விஜய்சேதுபதி மற்றும் அசோக்செல்வன் ஆகிய இருவரும் ‘சூது கவ்வும்’ மற்றும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது