திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2019 (16:17 IST)

தன்னை வளர்த்து பிரபலமாக்கியவரை மறக்காத ரியோ! குவியும் பாராட்டுக்கள்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தனது வித்யாசமான, தனித்துவமான ஆங்கரிங் திறன் மூலம் இளசுகளை கவர்ந்திழுத்த இவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்துவழங்குவதில் வெரைட்டி காட்டி படு ஃபேமஸ் ஆனார்.


 
அந்த நிகழ்ச்சியில் கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து `சரவணன் மீனாட்சி’ தொடரில் லீட் ரோலிலும், விஜய் டிவி-யின் ரியாலிட்டி ஷோவிலும் கலக்கிவருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வரும் ரியோ நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்க உள்ள புதிய படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமாக உள்ளார். தற்போது இவர் பிரபல விஜய்  டிவியில் ‘ரெடி ஸ்டெடி போ’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 
 
இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால், நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சன் தொலைக்காட்சி தனது பிறந்த நாளை கொண்டாடியது. இதற்கு ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ரியோ. விஜய் டிவிக்கு வந்தாலும் பழசை மறக்காமல் தன்னை வளர்த்து விட்ட சன் டிவிக்கு வாழ்த்து தெரிவிக்கிறாரே என  ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.