சிம்பு & ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியில் உருவாகும் படத்தின் ரிலீஸ் அப்டேட்!
ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலருடைய நடிப்பில் உருவான பார்க்கிங் படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி தயாரித்திருந்தது. இந்த படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து அவர் சிவகார்த்திகேயன் மற்றும் விக்ரம் ஆகியோருக்கு கதை சொல்லியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அவரின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை டாவ்ன் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
இந்த படம் சிம்புவின் அடுத்த படமாக இருக்கும் என சொல்லப்படும் நிலையில் ஏப்ரல் மாதத்தில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் படம் டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கலில் ரிலீஸாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.