திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : சனி, 1 ஜூன் 2019 (18:33 IST)

"தப்பு பண்ணாதான் பயப்படணும்" வேற லெவல் நடிப்பில் ஜோதிகாவின் 'ராட்சசி' ட்ரைலர்!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களுக்கு நிகராக... ஏன் அவர்களை விட ஒருபடி மேலே சென்று  தனக்கென ஒரு தனி இடத்தையும், தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றவர் நடிகை ஜோதிகா. கடந்த ஆண்டும் செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, நாச்சியார் என கதாநாயகிக்கு முக்கயத்துவம் வாய்ந்த பல வெற்றி படங்களை கொடுத்தார். 


 
அந்தவகையில் தற்போது மீண்டும் சிங்கிள் நாயகியாக படத்தை தூக்கி சும்மக்கும் வகையில் நடித்து வரும் படம் தான் " ராட்சசி" . கௌதம்ராஜ் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம்  தயாரித்துள்ளது.  சீன் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்து ரசிகர்களிடையே நல்லவரவேற்பை பெற்றதையடுத்து இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது.
 
காக்க காக்க படத்தில் பவ்யமான ஆசிரியையாக நடித்திருந்த ஜோதிகா இந்த படத்தில் மிரட்டலான ஆசிரியராக நடித்து தூள் கிளப்பியிருக்கிறார். இப்படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
நேற்று வெளியான இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் ஒரே நைட்டில் ட்ரெண்டாகிவிட்டது.  படத்தில் தலைமையாசிரியையாக வலம் வரும் ஜோதிகா, மாணவர்களிடம் அன்பாகவும் தன் பணியைச் செய்யவிடாமல் தடுக்கும் சமூக விரோதிகளிடம் ராட்சசியாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
 
"தீமை நடக்கிறது என்று சொல்லி அதனை தடுக்காமல் அதன் கூடவே பயணிக்கிறவர்கள் தீமையின் ஒரு பகுதியாகவே ஆகிறார்கள்" என்று ட்ரெய்லரில் ஜோதிகா கூறும் வசனம் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
வருகிற ஜூன் மாதம் வெளியாகவுள்ள இப்படம் நிச்சயம் ஜோதிகாவிற்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமையும் என்பது இப்படத்தில் ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது.

video Link