திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : வெள்ளி, 3 மே 2019 (12:06 IST)

"பாம்புடன் படாத பாடுபடும் ஜெய்" நீயா 2 புதிய ட்ரைலர் !

`நீயா 2' படத்தின் புதிய ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


 
கமல்ஹாசன் - ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘நீயா’. தற்போது 39 வருடங்களுக்கு பின் ‘நீயா 2’ என்ற பெயரில் இப்படம் தயாராகி இருக்கிறது. படத்தின் நாயகனாக ஜெய் இரண்டு வித பரிமாணத்தில் வருகிறார். பாம்பு பெண்ணாக வரலட்சுமி நடித்திருக்கிறார். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா ஆகியோரும் நாயகிகளாக நடித்துள்ளார்கள். பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
 
எல்.கே.சுரேஷ் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷபீர் இசையமைத்துள்ளார். இராஜவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
 
இந்நிலையில் தற்போது மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் புதிய ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.