1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
  4. Andava Kaanom Official Trailer

ஒரு ஊரையே ரணகளமாக்கிய "அண்டாவ காணோம்" ட்ரைலர்!

Sriya Reddy
திமிரு படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்த ஸ்ரேயா ரெட்டி, முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’அண்டாவ காணோம்’வேல்மதி என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் அதன்பின் ரிலீஸ் செய்ய ஒரு சில பிரச்சனைகள் வந்ததை அடுத்து ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் வருகிற ஆகஸ்ட் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இதற்கான ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக இருந்து வரும் படக்குழு தற்ப்போது இதன் ட்ரைலரை வெளியிட்டுள்ளனர். காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஷ்வமேத்ரா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் வரும் அண்டா கதாபத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்துள்ளது கூடுதல் சிறப்பு. இதோ அந்த ட்ரைலர் வீடியோ..
அடுத்த கட்டுரையில்
கொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் கருணாஸ்!