செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (17:35 IST)

சுஷாந்தின் கடைசி படம் “தில் பேச்சாரா” ட்ரைலர் ரிலீஸ்

மறைந்த பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி திரைப்படமான " Dil Bechara " ட்ரைலர் ரிலீஸ்

பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சில வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து வெளியாக தயாராக உள்ள படம் “தில் பேச்சாரா”. இந்த படம் மே மாதமே ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் ஓடிடியில் வெளியாவதாக செய்திகள் வெளியான நிலையில் சுஷாந்த் சிங் ரசிகர்கள் மற்றும் பலர் இந்த படம் தியேட்டரில் வெளியாவதுதான் சுஷாந்த் சிங்கிற்கு நாம் செய்யும் மரியாதை என கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா எப்போது முடிந்து தியேட்டர்கள் திறக்கப்படும் என்பதே தெரியாத சூழல் உள்ளதால் இந்த படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் ஓடிடி உரிமத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் வாங்கியுள்ளது. ஜூலை 24ம் தேதி ஹாட்ஸ்டாரில் இந்த படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்றவுள்ளது.