1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 5 ஆகஸ்ட் 2020 (20:10 IST)

அண்டாவ காணோம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

அண்டாவ காணோம்’ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
திமிரு படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்த ஸ்ரேயா ரெட்டி, முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் ’அண்டாவ காணோம்’வேல்மதி என்பவர் இயக்கிய இந்த திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது
 
ஆனால் அதன்பின் ரிலீஸ் செய்ய ஒரு சில பிரச்சனைகள் வந்ததை அடுத்து ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது 
 
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டாவ கானோம் திரைப்படம் ஆகஸ்ட் 28ஆம் தேதி ஓடிடியில் ரிலீஸ் செய்யப் படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது தொடங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அஷ்வமேத்ரா இசையமைத்துள்ளார். இந்த படம் ஸ்ரேயா ரெட்டி மிகவும் எதிர்பார்த்த திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது