இலங்கை தமிழர் இனப்படுகொலை ஆல்பம் சாங்: யுவன்!
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. இசையமைப்பாளாராக இருந்த இவர் தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.
இவர் தயாரிப்பில் வெளியாகிய பியர் பிரேமா காதல் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா ஜோடியாக நடித்திருந்தனர்.
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா, ஒரு ஆல்பம் தயாரித்து இசையமைக்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது. அது இலங்கை தமிழர் இனப்படுகொலை பற்றியதாம். ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.