திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (22:18 IST)

யுவன் சங்கர் ராஜாவின் ஆடி காரோடு எஸ்கேப் ஆன டிரைவர்..

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. இவரது ஆடி காரை எடுத்துக்கொண்டு மாயமாகியுள்ளதாக எழும்பூர் காவல் நிலையத்தில் யுவன் புகார் அளித்துள்ளார். 
 
யுவன்சங்கர் ராஜா திருமணமாகி தனது மனைவியுடன் சென்னை எழும்பூர் எத்திராஜ் கல்லூரி அருகே உள்ள ஒரு அபார்ட்மெண்டில் வசித்து வருகிறார். 
 
இவர் தனது மனைவி பயன்படுத்துவதற்காக ஆடி ஏ-6 ரக கார் ஒன்றை வைத்திருந்துள்ளார். இந்த காரை ஓட்டுவதற்கு நவாஸ்கான் சாதிக் என்பரை டிரைவராக நியமித்துள்ளனர்.
 
இந்நிலையில், ஒரு நிகழ்ச்சிக்காக யுவன் சங்கர் ராஜா மதுரைக்கு சென்றுள்ளார். வீட்டிலிருந்த ஆடி காரை டிரைவர் நவாஸ்கான் சாதிக் கடந்த மாலை 5 மணிக்கு எடுத்துச்சென்றுள்ளார்.  
 
ஆனால், அதன் பிறகு, அவர் வீடு திரும்பவில்லை. டிரைவரை தொடர்புகொள்ள முடியவில்லை. டிரைவரின் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. 
 
இதையடுத்து யுவன் சங்கர் ராஜா எழும்பூர் காவல் நிலையத்தில் தனது காரை டிரைவர் திருடி சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளார்.