பிக் பாஸ் ஹரிஷ் கல்யாணைப் பாராட்டிய யுவன் சங்கர் ராஜா...
‘பிக் பாஸ்’ ஹரிஷ் கல்யாண் பாடிய பாடலைக் கேட்டு, அவரைப் பாராட்டியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.
ஹரிஷ் கல்யாண் நடித்துவரும் படம் ‘பியார் பிரேமா காதல்’. அவருக்கு ஜோடியாக ‘பிக் பாஸ்’ ரைஸா வில்சன் நடித்து வருகிறார். இளன் இயக்கும் இந்தப் படத்தில் ரேகா, ஆனந்த் பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா, படத்தைத் தயாரிக்கவும் செய்துள்ளார்.
இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஹை ஆன் லவ்’ பாடல், காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வெளியானது. நிரஞ்சன் பாரதி எழுதிய இந்தப் பாடலை, சித் ஸ்ரீராம் பாடியிருந்தார்.
இந்தப் பாடலுக்கான கவர் வெர்ஷனை, ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் பாடியிருந்தார். ஹரிஷ் கல்யாண் ஓரளவுக்கு நன்றாகப் பாடுவார் என்பதை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியிலேயே பார்த்திருக்கலாம்.
அவர் பாடிய கவர் வெர்ஷனைப் பார்த்து, ‘நீங்கள் இவ்வளவு அருமையாகப் பாடுவீர்கள் என நினைக்கவில்லை. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்’ எனப் பாராட்டியுள்ளார் யுவன் சங்கர் ராஜா.