1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 22 ஜூலை 2018 (17:42 IST)

12 மணி நேரத்தில் சாதனை படைத்த பியார் பிரேமா காதல் டிரெய்லர்

இளன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் ரைசா, ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவர இருக்கும் பியார் பிரேமா காதல் படத்தில் டிரெல்யர் வெளியாகி சாதனை படைத்துள்ளது.

 
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் ரைசா, ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் திரைப்படம் பியார் பிரேமா காதல். இந்த படத்தில் சிங்கிள் டிராக் டோப் என்ற பெயரில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. வெளியான 12 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. மாஸ் ஹீரோ படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்தின் டிரெய்லருக்கு கிடைத்துள்ளது. 
 
யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் பியார் பிரேமா காதல் திரைப்படத்தை இளம் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசை அமைத்துள்ளார்.