செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 30 மே 2018 (20:27 IST)

உடைந்த சுசீந்திரன் - யுவன் கூட்டணி!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தற்போது பட தயாரிப்பிலும் கால் பதித்துள்ளார். 
 
தர்போது இயக்குனர் சுசீந்திரன் படத்தில் இருந்து யுவன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுசீந்திரன் இயக்கிய நான் மகான் அல்ல, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர் ஆகிய படங்களுக்கு யுவன்தான் இசையமைத்திருந்தார். 
 
பின்னர் ஒரு சில காரணங்களாள் இந்த கூட்டணி பிரிந்தது. அதன் பின்னர் மீண்டும் கோல் என்ற படத்தின் மூலம் இணைந்தனர். தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளாராம் யுவன். 
 
இவருக்கு பதிலாக இசையமைப்பாளர் அரோல் குரோலியை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.