நயன்தாராவை அடுத்து அஞ்சலி – துரத்தி துரத்திக் காதல் செய்யும் யோகி பாபு !

Last Modified வியாழன், 11 ஜூலை 2019 (15:43 IST)
அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் புதியப் படத்தில் யோகிபாபு அவரைக் காதலிப்பவராக நடிக்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இப்போது கொஞ்ச காலமாக கதாநாயகிகளை மையமாகக் கொண்டு உருவாகும் படங்களும் வெளியாக ஆரம்பித்துள்ளன. அருவி, மாயா, கோலமாவு கோகிலா, கர்ஜனை ஆகியப் படங்கள் முன்னனி கதாநாயகிகளை முக்கியப் பாத்திரமாகக் கொண்டு வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் அஞ்சலியை மையக் கதாபாத்திரமாகக் கொண்டு ஒருப் படம் உருவாகி வருகிறது. ஹாரர் பேண்டஸி ஜார்னரில் உருவாகும் இந்தப் படத்தை  சொன்னா புரியாது படத்தின் இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்க இருக்கிறார். இந்தப்படத்தில் அஞ்சலிக்கு ஜோடியாக கதாநாயகன் யாரும் கிடையாது. அதற்குப் பதிலாக அஞ்சலியைத் துரத்தி துரத்தி காதலிக்கும் வேடத்தில்  யோகி பாபு நடிக்கிறார்.

இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தில் இதேப் போன்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :