ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (17:24 IST)

"உனக்கென்னப்பா நயன்தாரா இருக்காங்க" - வாய்ப்பு கேட்ட விக்னேஷ் சிவனை கலாய்த்த இயக்குனர்!

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்து பலரையும் வெறுப்பேற்றி வருகின்றனர். 

 
இவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும் அளப்பறைகளை பார்க்கும் சமூக வலைதளவாசிகள் சிங்கிள் பசங்க சாபம் உங்களை சும்மா விடாது என கடுப்பாகின்றனர். அந்த அளவிற்கு லூட்டியடிக்கும் இந்த ஜோடி புறாக்கள் திருமணத்தை பற்றி மூச்சு விடாமல் கமுக்கமாக இருக்கிறார்கள். ஆனால் ஊர்சுற்றும் நெருக்கமான புகைப்படங்கள் மட்டும் அவ்வப்போது வெளியாகி பலரையும் புகைய வைத்துவிடுகிறது. 
 
‘நானும் ரௌடி தான்’ படத்தை  இயக்கி ஹிட் கொடுத்த விக்னேஷ் சிவன் அந்த படத்திற்கு பிறகு காதலியை பொத்தி பொத்தி பத்திரப்படுத்துவதிலேயே பிசியாகி கெரியரில் கோட்டை விட்டுவிட்டார். இதனால் இருக்கும் வாய்ப்புகள் ஏதுமின்றி தற்போது குறும்பட இயக்குனர்களுக்கு இணையாக வாய்ப்புகள் தேடி அலைந்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை  இயக்கிய நெல்சன் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறாராம். அதற்காக ஆட்கள் தேவை என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட விக்னேஷ் சிவன் நான் ஏற்கனவே மெயில் அனுப்பிவிட்டேன். ஆனால் உங்கள் தரப்பிலிருந்து எந்த பதிலும் வரவில்லை ரிப்ளை செய்திருந்தார். 


 
இதற்கு பதிலளித்த இயக்குனர் நெல்சன் "ஷூட்டிங் நேரத்தில் நீ எப்போ எந்த நாட்ல இருப்பேன்னு  தெரியாதே டா" என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் அடிக்கடி நயன்தாராவுடன் வெளிநாட்டிற்கு செல்வதை தான் நெல்சன் இப்படி கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.