செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 20 மே 2025 (15:32 IST)

ரவி வெறும் கையோடு வெளிய போகல.. திட்டமிட்டு சதி செய்தார்! - ஆர்த்தி ரவி பரபரப்பு அறிக்கை!

Mohan Ravi Kenisha

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்புகளால் அடுத்தடுத்து அறிக்கை விட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்நிலையில் ஆர்த்தி ரவி தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ரவி மோகன் சம்பளத்தைக் கூட தான் பறித்துக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டியது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். 

 

அதில் அவர் “எங்கள் திருமண வாழ்க்கை பிரச்சினைக்கு பணமோ, அதிகாரமோ, கட்டுப்பாடுகளோ காரணமல்ல. எங்கள் வாழ்வில் மூன்றாவதாக வந்த அந்த நபர்தான் அனைத்திற்கும் காரணம். எங்களுக்குள் விவாகரத்து ஆவணங்கள் தாக்கல் செய்யப்படும் முன்னரே அவர் எங்கள் வாழ்க்கைக்குள் வந்துவிட்டார்.

 

அவருக்கு கேடு தரும் தீய பழக்க வழக்கங்களில் இருந்து அன்புடன் பராமரித்த எனக்கு ‘கட்டுப்படுத்திய மனைவி’ என பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. தனது சொத்துகளை, கௌரவத்தை இழந்து ரவி வெறும் காலோடு ஒன்றும் வீட்டை விட்டு போகவில்லை. கச்சிதமாக திட்டமிட்டு விலை உயர்ந்த ஆடைகள், காலணிகளோடு, 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ரேஞ்ச் ரோவர் காரில்தான் வெளியேறினார்.

 

எனது பிடியில் இருந்து தப்பி செல்ல நினைத்திருந்தால் அவரது பெற்றோர்களை பார்க்க சென்றிருக்கலாமே, நேராக ஏன் எங்கள் வாழ்க்கையை சேதமாக்கியவரின் வீட்டிற்கு செல்ல வேண்டும். இதை தற்காப்பு நடவடிக்கையாக யாரும் குழப்பிக் கொள்ள வேண்டாம்” என கூறியுள்ளார். மேலும் நீளமாக செல்லும் அந்த அறிக்கையில் அவர் பல விசயங்களை பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K