தொடர்புடைய செய்திகள்
- விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!
- மாடர்ன் உடையில் ஜொலிக்கும் ஷிவானி நாராயணன்… கார்ஜியஸ் க்ளிக்ஸ்!
- மீண்டும் இந்தி சினிமாவில் கீர்த்தி சுரேஷ்… இந்த முறையாவது வெற்றிக் கிடைக்குமா?
- சூர்யவம்சம் 2 படத்தில் சிவகார்த்திகேயன்… தேவயானி கணவர் சொல்லும் ஐடியா!
- ஒரு வீரரின் பெருமையைக் கோப்பைகள் தீர்மானிக்காது- கோலிக்கு ஆதரவாக சேவாக் கருத்து!
கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!
கீர்த்தி சுரேஷ் மலையாள முன்னணி தயாரிப்பாளரான சுரேஷின் மகள். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளனர். வளர்ந்த பின்னர் கதாநாயகியாகவும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் அவரின் முதல் படம் ஏ எல் விஜய் இயக்கிய இது என்ன மாயம் திரைப்படம்தான். அதன் பின்னர் வெளியான ரஜினி முருகன் படம் அவரை முன்னணி நடிகையாக்கியது.
இப்போது தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு நிலையான மார்க்கெட் வைத்திருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். ரஜினி, விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ள அவர் இடையில் நடிகையர் திலகம் திரைப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். அதன் பின்னர் பெண்குயின், சாணிக் காயிதம் மற்றும் ரகு தாத்தா போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் கதைகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை மணந்துள்ளார். அவரின் முதல் பாலிவுட் படமான பேபி ஜான் ரிலீஸாகி தோல்வி அடைந்தாலும், கல்யாண குஷியில் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இந்நிலையில் இப்போது அவர் தன் கணவரோடு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
அடுத்த கட்டுரையில்
