மாவீரன் ஸ்டைலில் பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் வெளியான நாவல்கள்!
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ளள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. படத்தில் சிவகார்த்திகேயன் கதாபாத்திரத்துக்கு ஒரு விபத்துக்கு பின்னர் அசரீரி போன்ற ஒரு குரல் காதில் கேட்க ஆரம்பித்து, அவரை வழிநடத்த ஆரம்பிக்கும்.
இந்த அம்சம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. படத்தில் அந்த அசரீரி குரலுக்கு விஜய் சேதுபதி டப்பிங் செய்துள்ளார். இந்நிலையில் இதுபோல காதுக்குள் ஒரு குரல் கேட்கும் விதமாக தமிழில் இரு முக்கியமான நாவல்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகியுள்ளன.
பழம்பெரும் எழுத்தாளர் எம் வி வெங்கட்ராம் எழுதிய காதுகள் நாவலிலும் கதைநாயகன் மகாலிங்கத்துக்கு இதுபோல ஒரு குரல் கேட்க ஆரம்பித்து அவருக்கு பல மனநல பிரச்சனைகளை உருவாக்கும். அதே போல எழுத்தாளர் சுஜாதா எழுதிய ஆ நாவலிலும் கதைநாயகனுக்கு இதுபோல குரல் கேட்டு அவரை தற்கொலை செய்துகொள்ள சொல்லி வற்புறுத்தும். அதனால் அவருக்கு ஏற்படும் பாதிப்புகளை விறுவிறுப்பாக எழுதியிருப்பார் சுஜாதா.