திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (07:13 IST)

50 கோடி வசூலை நெருங்கும் சிவகார்த்திகேயனின் மாவீரன்!

சிவகார்த்திகேயன் நடிப்பில்  உருவாகியுள்ளள மாவீரன் திரைப்படம் ஜூலை 14 ஆம் தேதி ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் இந்த படம் நல்ல வசூலைப் பெற்று வருகிறது. முதல் நாளில் தமிழகத்தில் 6.5 கோடி ரூபாய் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

படத்தின் முதல் பாதி எல்லோருக்கும் பிடித்திருப்பதாகவும், ஆனால் இரண்டாம் பாதியில் சொதப்பி இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தாலும், வார இறுதி நாட்களில் நல்ல வசூல் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தின் ஒட்டு மொத்தவசூல் 40 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாகவும், விரைவில் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் எனவும் சொல்லப்படுகிறது. மாவீரன் திரைப்படம் தெலுங்கிலும் மாவீர்டு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி வரவேற்பை பெற்றுள்ளது.