ஞாயிறு, 22 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2023 (06:55 IST)

குமரேசன் ரெடி.. விடுதலை 2 வுக்கு தயரான சூரி… வெளியிட்ட வீடியோ!

மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்களும் கூட பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இப்போது அடுத்த பாகத்துக்கான ஷூட்டிங் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கியுள்ளது.

25 நாட்களில் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் முடித்து திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு முக்கியத் தகவலாக படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் தற்போது சூரி விடுதலை படத்துக்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றியுள்ளார். இது சம்மந்தமான வீடியோவை வெளியிட்டுள்ள அவர் “குமரேசன் ரெடி… விடுதலை ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது” என கூறியுள்ளார்.