செவ்வாய், 16 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 11 டிசம்பர் 2025 (18:07 IST)

அருண் விஜயின் 'ரெட்ட தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ஒரு சர்ப்ரைஸ்..!

அருண் விஜயின் 'ரெட்ட தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ஒரு சர்ப்ரைஸ்..!
அருண் விஜய் நடித்த 'ரெட்ட தல' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி சில மாதங்கள் ஆன பின்னரும், அதன் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. 
 
இந்த நிலையில், தற்போது கிறிஸ்துமஸ் விருந்தாக டிசம்பர் 25-ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், இந்தப் படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடலான 'டார்க் தீம்' பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்து, அதற்கான போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
அருண் விஜய், சித்தி இட்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்த இந்த திரைப்படத்தை கிரிஷ் திருக்குமரன் என்பவர் இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், அருண் விஜய்க்கு திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva