திங்கள், 19 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!
நடிகர் அஜித் ஒருபுறம் சினிமாவில் கவனம் செலுத்தி கொண்டே, இன்னொரு பக்கம் கார் பந்தயத்தில் கலந்துகொள்வதில் விருப்பமுள்ளவராக இருக்கிறார். அவர் சில போட்டிகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் என்பதையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில், தற்போது ஆசியன் லீ மேன் சீரிஸ் என்ற கார் பந்தயத்திற்கு அஜித்தின் 'ஏகே அணி' தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
 
முதல் போட்டியில் அஜித்துடன் இணைந்து நரேன் கார்த்திகேயன், ஜூலியன் கெர்பி கலந்து கொள்ள இருப்பதாகவும், இரண்டாவது போட்டியில் ஆதித்யா மற்றும் ரொமைன் ஆகியோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரு அணிகளும் அஜித்தின் 'ஏகே அணியைச்' சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அஜித்தின் அடுத்த பதக்கத்திற்காக வாழ்த்துக்கள் என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva