செவ்வாய், 2 ஜூலை 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 பிப்ரவரி 2024 (17:51 IST)

விஜய் அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி- பிரபல நடிகர்

அரசியல் கட்சி தொடங்கியிருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துகள் என்று   நடிகர் நிழல்கள் ரவி தெரிவித்துள்ளார்.
 
நெல்லையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்துள்ள சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமாரை அவர் தங்கியுள்ள தனியார் ஓட்டல் ஒன்றில்  நடிகர் நிழல்கள் ரவி சந்தித்தார்.
 
அதன்பின்னர்,  நடிகர் நிழல்கள் ரவி செய்தியாளர்களை சந்தித்தார்.
nizhalkal ravi,
அப்போது அவரிடம்  நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ளது பற்றி கேள்வி எழுப்பினர்.
 
இதற்குப் பதிலளித்த அவர்,   நடிகர் விஜய் அரசியலுக்கு  வருவது வரவேற்புக்குரியது. நல்ல எண்ணம் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வந்ததில் மகிழ்ச்சி. தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியிருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.