புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 22 நவம்பர் 2023 (10:28 IST)

விசித்திராவிடம் தவறாக நடந்து கொண்ட டாப் நடிகர் யார்? – ஆதரவு குரல் கொடுக்கும் நெட்டிசன்கள்!

Vichitra
பிக்பாஸ் போட்டியில் விளையாடி வரும் நடிகை விசித்ரா தனக்கு சினிமா துறையில் ஏற்பட்ட மோசமான சம்பவம் குறித்து பேசியது வைரலாகியுள்ளது.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் தமிழ் சினிமா நடிகை விசித்திராவும் பங்கேற்று விளையாடி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர்களில் விசித்திராவும் ஒருவர். ப்ரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டபோது அவர் கேள்வி எழுப்பியதற்காக பெண்கள் மீது அவருக்கு அக்கறை இல்லை என்ற வகையில் மாயா மற்றும் பலர் அவரை சாடி வந்தனர்.

ஆனால் நேற்று நடந்த எர்த்குவாக் டாஸ்க்கில் விசித்திரா தனது வாழ்வில் நடந்த மோசமான சம்பவத்தை சொன்னபோது ஹவுஸ்மேட்ஸே கண் கலங்கி விட்டனர். ஒரு பிரபல நடிகர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும் அதற்கு தான் மறுத்ததால் பல்வேறு வகையில் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சி ஒன்றில் பழிவாங்குவதற்காக தனது உடலின் சில பகுதிகளை திட்டமிட்டே சிலரை வைத்து தொட வைத்ததாகவும் கண் கலங்க கூறினார். மேலும் இதுகுறித்து அவர் புகார் அளித்தும் நடிகர் சங்கம் உள்பட யாரும் அந்த பிரபல நடிகர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

பெண்களுக்கு எதிரானவராக தொடர்ந்து மாயா கேங் நினைத்து வந்த விசித்திராவின் இந்த கதையை கேட்டு அனைவரும் கலங்கினர். சமூக வலைதளங்களில் விசித்திராவுக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். விசித்திரா பிக்பாஸ் வீட்டை விட்டு வந்ததும் அந்த டாப் நடிகர் மேல் வழக்கு தொடர வேண்டும் எனவும் சிலர் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் விசித்திரா சொன்ன ஷூட்டிங் காட்சி வர்ணனைகளை வைத்து அவர் நடித்த ஒரு படத்துடன் பொருந்தி போகும் சில காட்சிகளை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். பிரபலமான தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த அந்த படத்தில் விசித்திராவும் நடித்துள்ளார். ”பலேவடிவய்யா பாசு” என்ற அந்த தெலுங்க படப்பிடிப்பின்போதுதான் படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் ஏ.விஜய் மீது விசித்திரா பாலியல் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Edit by Prasanth.K