வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 12 அக்டோபர் 2023 (11:11 IST)

சமைக்க முடியாது.. பட்டினியா கிடங்க..! ஸ்ட்ரைக்கில் இறங்கிய ஸ்மால் ஹவுஸ்!

Biggboss
பிக்பாஸ் சீசன் 7 தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த முறை பிக்பாஸ் ஹவுஸ், ஸ்மால் ஹவுஸ் என வீடுகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்மால் ஹவுஸை சேர்ந்தவர்களே சமைக்க வேண்டும் என்பதால் தொடர்ந்து பிரச்சினைக்கு மேல் பிரச்சினையாக நடந்து வருகிறது.


 
கடந்த வாரம் ஸ்மால் ஹவுஸில் இருந்த விசித்திரா, நிக்சன் உள்ளிட்டவர்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் சரியாக சமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் இப்போது ஸ்மால் ஹவுஸ் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ள மாயா, விஷ்ணு, விஜய் கூட்டு சேர்ந்து கொண்டு தினம் ஒரு பிரச்சினயை செய்து வருகிறார்கள். வீட்டின் தலைவராக இருக்கும் விக்ரம் சரவணனும் வாயில்லா பூச்சியாக இருப்பதால் அவர்கள் ஆட்டம் அதிகமாக உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் ஆளுக்கு ஒன்று கேட்டால் சமைத்து தர முடியாது. மொத்தமாக ஒரு மெனுவை தயாரித்து கொண்டு வாருங்கள் சமைத்து தருகிறோம் என சொன்னதுடன், உப்புமாவை தங்கள் இஷ்டத்திற்கு செய்து வீணாக்கி விட்டனர் என விசித்திரா சொன்னதற்கும் அவரிடம் சண்டைக்கும் சென்றனர்.

இதனால் கடுப்பான பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் நாங்கள் கேட்பதைதான் நீங்கள் சமைத்து தர வேண்டும் என சொல்லி மெனு போர்டில் தங்களுக்கு பிடித்ததை எல்லாம் எழுதி வைத்துள்ளனர். உங்க இஷ்டத்துக்கு நாங்க சமைக்க முடியாது என ஸ்மால் ஹவுஸ் வீட்டுக்காரர்கள் சமையலை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சாப்பாடு கிடைக்காமல் பிக்பாஸ் வீட்டுக்காரர்கள் பசியோடு இருப்பதால் தாங்கள் கொடுத்த உணவு பொருட்களையும் திரும்ப எடுத்து வந்து விட்டனர். இதனால் பிக்பாஸ் வீடே பெரும் சண்டை வெடிக்கும் நிலையில் உள்ளது.

Edit by Prasanth.K