வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2023 (11:20 IST)

ப்ளான் பண்ணிதான் அடிச்சேன்.. என்னா இப்போ? – புது ஆட்களை வெச்சு செய்யும் பிக்பாஸ் வீட்டார்!

Bigg boss
பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு ரவுண்டு மூலம் புதிய நபர்கள் உள்ளே நுழைந்துள்ள நிலையில் ஏற்கனவே உள்ளவர்களுக்கும் புதியவர்களுக்கும் முதல் நாளே சண்டை கிளம்பியுள்ளது.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஷ் தொடரின் ஏழாவது சீசன் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. இந்த வாரம் வினுஷா, யுகேந்திரன் இருவரும் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், புதிதாக ஐந்து பேரை வைல்ட் கார்டு மூலம் உள்ளே அனுப்பி உள்ளனர்.

இந்த ஐந்து பேரும் கடந்த ஒருமாதமாக பிக்பாஸ் தொடரை டிவியில் பார்த்து வருவதால் யார் யார் எப்படி என்று எல்லாத்தையும் வியூகம்செய்து ஃப் உள்ளே விளையாட உள்ளனர். ஆனால் ”உங்களை விளையாட விட்டாதானே?” என்ற ரீதியில் புதிதாக வந்தவர்களை ஃப் பிளான் பண்ணி அடிக்க தொடங்கியுள்ளனர் பிக்பாஸ் வீட்டின் பழைய ஹவுஸ்மேட்ஸ்.

அந்த வகையில் தற்போது கேப்டனாக உள்ள பூர்ணிமா ஸ்மால் ஹவுஸ்ர்க்கு அனுப்பும் ஆட்களுக்கு விசித்திரா தவிர மற்ற அனைவரையும் புதிய ஆட்களாக எடுத்து அனுப்பியுள்ளார். நீங்க பிளான் பண்ணி எங்கள ஸ்மால் ஹவுஸ் க்கு மிரட்டுறீங்களா என்று அவர்கள் கேட்டபோது ஓப்பனாக ஆமாம் பிளான் பண்ணி தான் அடிக்கிறோம் என்னா இப்போ என்று ஹவுஸ் மேட்ஸ் கேட்டுள்ளனர். இதனால் வெளிப்படையாக புதிய நபர்களுக்கும் பழைய ஹவுஸ் மேட்ஸ்க்கும் தகராறு தொடங்கியுள்ளது.

Edit by Prasanth.K