திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 அக்டோபர் 2023 (11:32 IST)

அசிங்கமாக பேசிய ப்ரதீப்.. மூட்டை முடிச்சை கட்டி வெளியேறும் கூல் சுரேஷ்! – பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு!

Biggboss 7
பிக்பாஸ் வீட்டில் நடந்த டாஸ்க் ஒன்றில் கூல் சுரேஷுக்கும், ப்ரதீப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.



விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் ஒரு மாதத்தை கடந்து பரபரப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. இது பிக்பாஸ் கண்டஸ்டண்ட்ஸ் நான்கு பேர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது வைல்ட் கார்டு ரவுண்டு மூலம் ஐந்து பேர் உள்ளே சென்றுள்ளனர்.

இதனால் புதிதாக வந்திருப்பவர்களை வைத்து செய்ய வேண்டும் என்று பழைய ஹவுஸ்மேட்ஸ் திட்டம் வகுத்து வருகின்றனர். ஆனால் அதற்குள் பிக்பாஸில் நடந்த டாஸ்க் ஒன்றில் பழைய ஹவுஸ் மேட்ஸ் உள்ளேயே மோதல் எழுந்துள்ளது. தலையில் மணியை கட்டிக்கொண்டு சத்தம் வராமல் இருக்க வேண்டும் என்று நடந்த டாஸ்கில், பிரதீப் கட்டியிருந்த மணி சத்தம் எழுப்பியதாக கூல் சுரேஷ் சொல்ல, அதற்கு கூல் சுரேஷை, பிரதீப் கடுமையான வார்த்தைகளில் பேசியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த கூல் சுரேஷ் “இனிமேல் நான் இந்த பிக்பாஸ் வீட்டுல இருக்க மாட்டேன்” என்று கூறி தனது பைகளை எடுத்துக்கொண்டு வேகமாவே வெளியே புறப்பட்டுள்ளார். புதிய அவர்களுடன் சண்டை செய்வார்கள் என்று பார்த்தால் அவர்களுக்குள்ளேயே அவர்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K