திங்கள், 13 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 31 டிசம்பர் 2022 (09:44 IST)

துணிவு அப்டேட் வந்தாச்சு… வாரிசு எப்போ? காத்திருக்கும் ரசிகர்கள்!

துணிவு படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு ரிலீஸ் ஆகும் என படக்குழு அறிவித்துள்ளது.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே சில்லா சில்லா , காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய பாடல்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று மாலை 7 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

புத்தாண்டை துணிவு டிரைலரோடு கொண்டாட அஜித் ரசிகர்கள் தயாராகிவிட்ட நிலையில் வாரிசு டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர். அநேகமாக வாரிசு டிரைலர் நாளை வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.