1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 30 டிசம்பர் 2022 (15:58 IST)

துணிவு படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித் நடித்த துணிவு திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் ஏற்கனவே சில்லா சில்லா , காசேதான் கடவுளடா மற்றும் கேங்ஸ்டா ஆகிய பாடல்கள் ரிலீஸ் ஆகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

டிரைலர் டிசம்பர் 31 ஆம் தேதி டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று படத்தில் நடித்துள்ள நடிகர்களின் கதாபாத்திர அறிமுகங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இப்போது துணிவு படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் 2 மணிநேரம் 23 நிமிடம் ஓடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வலிமை படத்தின் நேரம் அதிகமாக இருந்ததால் விமர்சனங்கள் எழுந்து பின்னர் நீளம் குறைக்கப்பட்டது.